ருத்திராட்சம் தோன்றிய வரலாறு
சிவனை வழிபடுகிறவர்கள் அணிவது.சிவனுக்கு உருத்திரன் என்று ஒருபெயர். மும்மூர்த்திகளில் சிவன் ஒருவன் (பிரும்மா, விஷ்ணு, சிவன்) முத்தொழில்களில் அழித்தல் (படைத்தல், காத்தல், அழித்தல்) அவனுடையது உருத்திரன் அழிக்கும் வேலையைச் செய்கிறான். அவன் தீமைகளை அழிக்கிறான், தீயோர்களை
அழிக்கிறான்.உருத்திரனின் கண்களில் இருந்து விழுந்த நீர்த்துளியே உருத்திராட்சம் என்கிறாங்கள்.
அட்சம் என்கிற சொல் கண்ணைக் குறிப்பது.ஆக, உருத்திராட்சம் என்றால் "சிவனது கண்" என்று பொருள்படுகிறது .உருத்திராட்சம் துன்பங்களை அழிக்கிறது, துயரங்களை அகற்றுகிறது. சிவபக்தர்களால் அணியப் பெறுகிற இந்தமனி சிவன்
திரிபுராசுரர்களை வதம் பண்ணப் புறப்பட்டபோது காயத்ரியை
ஜபிக்க, கண்களில் இருந்து வீழ்ந்த கண்ணீர்த்துளிகள் இம்மணி
களாயின என்பது சரித்திரம். ருத்ரனின் கண்ணில் இருந்து விழுந்த
நீர்த்துளியில் இருந்து உருத்திரட்ச மரங்கள் முளைத்தன.
அம்மரத்தில் தோன்றிய மணிகளுக்கு ருத்ராட்சம் என்றே
பெயர் வழங்கலாயிற்று.
உருத்திராட்சத்தின் தாவரவியல் பெயர் (Botanical name) எலியோ கார்பஸ் ஆகும். இதில் பலவகை. இந்தியாவில் தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற இடங்களில்
இம்மரங்கள் வளர்கின்றன. உலக அளவில் சொல்வதாயின் ,
இலங்கை, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சீனா குறிப்பாக நேபாளம் ஆகிய இடங்களில் இவை காணப்படுகின்றன.
உருத்திராட்ச மரங்கள் உயரமாகவும் (சில மரங்கள் 100
அடி உயரம்) பருமனாகவும் வளரக்கூடியவை. ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் பூப்பருவத்தில் இருக்கிற உருத்திராட்சை ஜுன் வாக்கில் காய்க்கத் தொடங்கி ஆகஸ்ட், அக்டோபரில் அறுவடைக்குக் கனிந்துவிடும் .
உருத்திராட்சக் காய்கள் கடலை அளவில் சிறிதாகவும்,
நெல்லிக்காய் அளவு பெரியதாகவும் இருக்கும். நாவல்பழம் போல்
கருநீல நிறத்தில் உள்ள பழத்தின் தோலை நீக்கி, அதன் உள்ளே
இருக்கும் கொட்டைப் பகுதியே பயன்படுத்தப்படுகிறது.
உருத்திராட்சக் கொட்டையில் மேலிருந்து கீழ்வரை பல கோடுகள் இருக்கும். அந்தக் கோடுகள் ஏற்படுத்தும் பிரிவுகள்
முகங்கள் என்று அறியப்படும். ஒரு முகத்தில் இருந்தால்
ஏகமுக உருத்திராட்சம் என்கிறார்கள். இரண்டு, மூன்று என
இருபத்தியோரு முகங்கள் வரை அவை வேறுபடும்.
ஒரு கோடு உள்ளதையும், கோடுகளே இல்லாததையும்
ஏகமுக உருத்திராட்சமாகக் கொள்கிறார்கள்.
உருத்திராட்சக் கொட்டை பெரிதாக இருப்பதும் சிறிதாக இருப்பதும் அந்தமரம் வளர்கிற இடத்தின் தட்பவெப்பநிலையைப் பொறுத்தது.
பொதுவாக உருத்திராட்ச மரங்கள் ஏழு வருடங்களில்
காய்ப்புக்கு வரும். சிலவகை மரங்கள் பயன்கொடுப்பதற்கு
பதினைந்து ஆண்டுகள் வரை கூட ஆகும்.
இந்தியாவில் கர்நாடகம், தமிழகத்தில் நீலகிரி, பழனி
இருவண்ணாமலை பகுதிகளில் உருத்திராட்சம் விளைவதாகத்
தெரிகிறது. ஐந்து முக உருத்திராட்ச மணிகள் அதிக அளவிலும்,
இருபது முக உருத்திராட்சங்கள் அரிதாகவும் கிடைக்கின்றன.
உலகிலேயே நேபாளத்தில் கிடைக்கிற வகைதான் மிகவும்
தரமானதாக மதிக்கப்படுகிறது
உருத்திராட்ச மரத்தின் இலைகள் வாதா மரத்தின் இலைகளைப்
போல் வடிவம் கொண்டவை . இலைகளுக்கு இடையேயான கணுப்பகுதிகளில் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூக்கும் .
இலைகள் பசுமையாகவும், பூக்கள் வெண்மையாகவும், பழங்கள்
கருநிலமாகவும் (செந்நீல நிறத்திலும்) இருக்கும் . பழங்கள
கடினமான ஓட்டுப் பகுதியைக் கொண்டதாயிருக்கும் உள்ளே
இருக்கும் வித்துக்களே மணிகளாகின்றன.
கண்ணீர்த் துளிகள் மணியானது
முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்கிற அரக்கன் இருந்தான். அவனுக்கு கமலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் என மூன்று புத்திரர்கள்.இவர்கள் சிவபெருமானையே நோக்கித் தவம் இருந்தனர். இவர்களுடைய கடுமையான தவத்தை மெச்சிய சிவபெருமான், உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
தவம் செய்வோர்க்கு திருக்காட்சி நல்குவதோடு, வரமும்
தந்தருள்வது கடவுளரின் பண்பு.
அந்த அசுரர்கள் மூவரும் தங்களுக்கு உலோகத்தாலான
பறக்கும் கோட்டைகள் வேண்டும் என்று கேட்டனர். அவை
தங்கம்,வெள்ளி ,இரும்பு இவற்றில்அமைய வேண்டும் எப்போதும் அவை சுழன்றபடி இருக்கவேண்டும், சிவபெருமானைத் தவிர
வேறு எவராலும் தங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்றும்
தெரிவித்தனர். கிட்டத்தட்ட நிபந்தணை விதிக்கிறாற்போலத்
தான். சிவபெருமானும் உள்ளுக்குள் நகைத்தபடி அவர்கள்
கேட்டவரத்தை வழங்கினார்.
தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்று பறக்கும்
கோட்டைகள் மூன்று அசுரர்களும் மகிழ்ச்சியோடு தாங்கள்
விரும்பிய இடங்களுக்கு பறந்து சென்றனர். ஆங்காங்கே இருந்த
நாடு நகரங்களை நாசம் செய்தனர். அவர்கள் அகந்தை மிக்கவர்
களாய் தேவர்களையும் வதைத்து ,தேவலோகத்தைக் கைப்பற்றினர்.அப்போது விஷ்ணுபகவான் நாரதரை ஏவி திரி புராசுரர்களுக்கு பாஷண்ட மதத்தை உபதேசிக்கச்செய்தார். (பாஷண்டம் என்பது வைதீக சமயக் கொள்கையோடு வேதநெறியற்ற அவைதிகக் கொள்கையையும் கொண்டது). அதன் விளைவாக அந்த அசுரர்கள் சிவன்மீது முன்பு கொண்டிருந்த பக்தியை விட்டொழித்தனர். சிவபெருமான் அவர்கள் மீது சினமுடையவரானார். அந்நிலையில் தேவர்களும் திரபுரசுரர்கள் செய்யும் அக்கிரமங்கள் பற்றிச் சிவனிடம் முறையிட அவர் கடுஞ்சினைமுற்றார்.
தம்மையன்றி வேறுயாரும் அந்த அசுரர்களை அழிக்க
முடியாது என்பதால் சிவபெருமான் தமது கணங்களுடன் தாமே
யுத்தம் செய்யப் புறப்பட்டார்.
திரிபுராசுரர்களை அழிக்க அகோரம்' என்கிற அஸ்திரம்
தேவைப்பட்டது. சிவபெருமான் ஆயிரம் தேவருடங்கள்
தியானத்தில் இருந்து அஸ்திரத்தை உருவாக்கினார்.
பெருமாள் தியானம் இருந்த சமயத்தில் அவரது சோம,
சூரிய, அக்னி அம்சமான மூன்று கண்களில் இருந்தும் நீர்த்துளிகள்
திரண்டு நிலத்தில் விழுந்தன.
அந்தக் கண்ணீர்த்துளிகள் ஆற்றல்மிக்க உருத்திராட்ச
மரங்களாய் தலையெடுத்தன.
உருத்திரனின் கண்களில் இருந்து தோன்றியபடியால் அவை
உருத்திராட்சமரங்கள் என்றே அழைக்கப்பட்டன. அம்மரங்களின்
உருத்திராட்ச மரங்களின் வரலாற்றை, நாம் தேவிபாகவதம்,
ருத்ராட்சஜாபால உபநிடதம், பத்மபுராணம், ஸ்கந்தபுராணம்
இவற்றில் இருந்து அறிய முடியும்.
திரிபுரங்களையும் எரித்து, அம்மூன்று அசுரர்களையும்
கொன்ற பெருமான் அவர்களைத்தமது சிவகணங்களில் சேர்த்துக்
கொண்டார். இன்றைய மனிதர்களுக்குள்ளும் இறையருளால்
அழிக்கப்படவேண்டிய மூன்று கோட்டைகள் உண்டு
அவை ஆணவம், கன்மம், மாயை ஆகும.
எல்லாத் தேவர்களும் இறைவனின் திருவுளப்படி
உருத்திராட்சம் அணிந்து உயர்ந்தனர். நம்முடைய தீமைகள்
அகல நாமும் உருத்திராட்சம் அணிந்து உயர்வடையலாம்
பண்டைக்கால முனிவர்களில் இருந்து இன்றையஞானிகள்
வரை பலரும் உருத்திராட்சம் அணிந்து நல்லாரோக்கியத்தையும்,
முழுமையான வாழ்க்கையையும் பெற்றிருக்கின்றனர்.
இறைவனின் கண்ணீர்த்துளிகள் மணியாயின நேபாளம்,
மலேசியா, இந்தோனேசியக் காடுகளிலும், இமாலயப்
இந்திய பிரதேசத்திலும் கிடைக்கின்றன.
உருத்திராட்சத்தின் வகைகள் மற்றும் அதன் சுவாரசியமான தன்மைகள் பற்றி நாளை காண்போம்.